நிலக்கோட்டை அருகே பஸ் டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்ட இருவர் கைது

பஸ்சுக்குள் ஏறிய அவர்கள் திடீரென கத்தியை காட்டி பணம் கேட்டு டிரைவரிடம் தகராறு செய்தனர்;

Update: 2023-09-06 13:00 GMT

பைல் படம்

நிலக்கோட்டை அருகே அரசு பஸ்சை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டல் - 2 பேர் கைது:

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே வழக்கம்போல் பயணிகளை ஏற்றுக் கொண்டு செங்கோட்டை பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது 2 வாலிபர்கள் அரசு பஸ்சை வழிமறித்தனர். அவர்கள் பஸ் ஏறுவதற்காக த்தான் கையை காட்டுகின்ற னர் என்று நினைத்து பஸ்சை நிறுத்தினார். பஸ்சுக்குள் ஏறிய அவர்கள் திடீரென கத்தியை காட்டி பணம் கேட்டு டிரைவரிடம் தகராறு செய்தனர். இதனால் அங்கிருந்த பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சப்தம் போட்டனர்.

இமானுவேல் (29). அஜய்குமார் (22). ஆகிேயார் என தெரிய வந்தது.இதனைத் தொடர்ந்து, நிலக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, இம்மானுவேல்(29), அஜய்குமார்(22) ஆகிய 2 பேரை கைது செய்து நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஒட்டன்சத்திரம் அருகே கார் டிரைவர் கொலை : முக்கிய குற்றவாளி பெங்களூருவில் பதுங்கல்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிக்கை சேர்ந்த சுரேஷ்(27) என்ற கார் டிரைவரை கொலை செய்த வழக்கில் இது வரை 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான நடராஜனை தேடி சென்ற போது அவர் தப்பி ஓடி விட்டார்.தற்போது, அவர் பெங்களூரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.அதன் அடிப்படையில், தனிப்படை போலீசார் பெங்களூரு சென்று அவரை கைது செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.


Tags:    

Similar News