திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நாளுக்கு நாள் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது, இந்நிலையில் வன விலங்குகளான காட்டெருமை, பன்றி, மான், குரங்கு ஆகியவை உணவுக்காக நகர் பகுதிக்குள் வலம் வருவதால் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
தொடர்ந்து அண்மை காலமாக வனப்பகுதியில் நிலவும் வறட்சியால் உணவுக்காக வரும் காட்டெருமைகள் பிளாஸ்டிக் கழிவுகளை திண்று உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும் இன்று காட்டெருமை கூட்டம் உணவுக்காக சாலைகளில் உடல் நலிவடைந்த நிலையில் சுற்றி திரிந்து குப்பைகளையும் தின்று வருகிறது. எனவே வனத்துறை அதிகாரிகள் வனவிலங்குகளுக்கு தேவைப்படும் உணவுகளை வனப்பகுதிக்குள் ஏற்படுத்தி தர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .