கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல்
புத்தாண்டு கொண்டாதுவதற்கு கொடைக்கானலில் அதிகளவு சுற்றுலா பயணிகள் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது;
கொடைக்கானல் வெள்ளி நீர் வீழ்ச்சி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் புத்தாண்டை கொண்டாடுவதற்காக தமிழகம் கமட்டுமின்றி வெளிமாநில சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.
கொடைக்கானல் நுழைவாயில் சோதனைச்சாவடியில் அதிகமான சுற்றுலா பயணிகளின் வருகையால், வாகனங்கள் நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்து சென்றன.
இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டது.
வெளிமாநிலத்திலிருந்து வரும் சுற்றுலா பயணிகளை கொடைக்கானல் நுழை வாயில் சோதனைச் சாவடியில் மருத்துவ துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகு அனுமதித்து வருகின்றனர்.
இதனால் கொடைக் கானல் நுழைவாயில் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.