பழனி அருகே திமுக பிரமுகர் மீது, பெண் பாலியல் புகார்..!

மாற்றுத்திறனாளி மகனுக்கு அரசின் உதவி கேட்ட கணவனை இழந்த பெண்ணுக்கு திமுக பிரமுகர் பாலியல் தொந்தரவு செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டுளளது.;

Update: 2023-10-15 10:20 GMT

திமுக பிரமுகர் மீது, பெண் பாலியல் புகார்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் கணவனை இழந்த பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்து  ஆபாச வீடியோ, ஆடியோ அனுப்பிய திமுக பிரமுகர் பிரபு மீது பாதிக்கப்பட்ட பெண் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் கஸ்தூரி நகரைச் சேர்ந்தவர் சரோஜா. இவருக்கு திருமணமாகி ஊனமுற்ற ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவருடைய கணவர் இறந்து பத்து வருடங்கள் ஆன நிலையில், இவர் கூலி வேலை செய்து தன் இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றி வருகிறார்.

இந்நிலையில், வினோபா நகரைச் சேர்ந்த திமுக பிரமுகரான பிரபு என்ற இளைஞரிடம் சரோஜா தனது ஊனமுற்ற பையனுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளான மிதிவண்டி அல்லது ஏதாவது உதவி செய்து தரும்படி கேட்டுள்ளார். அதன் அடிப்படையில், சரோஜாவின் செல் நம்பரை பிரபு  பெற்றுக்கொண்டார். பின்னர்  பிரபு சரோஜாவுக்கு  தொடர்ந்து செல்போனில் அடிக்கடி பேசி செக்ஸ் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

அதன்பின், சரோஜா அவரது செல் நம்பரை பிளாக் லிஸ்டில் போட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து பிரபு கடந்த சில தினங்களாக வீடியோ காலில் தொடர்பு கொள்வதும், பேசுவதும், வாட்ஸ் ஆப்பில் ஆபாச படங்களை அனுப்புவதும், ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்துவதும்  அவரது ஆபாச புகைப்படங்களை அனுப்புவதுமாக  தொடர்ந்து அவருக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார்.

மேலும், நான் திமுக பிரமுகர் என்றும், என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்றும், அதனால் நீ என் ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும்,  அப்படி இணங்காவிட்டால், உன்னை கொன்று விடுவேன் என்றும், உன் பிள்ளைகள் அனாதைகள் ஆகிவிடுவார்கள்  என்றும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால், பயந்து போன சரோஜா, ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் தனக்கும் தனது குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வேண்டியும், தனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு தந்து வரும்  திமுக பிரமுகர் பிரபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  கண்ணீர் மல்க ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Tags:    

Similar News