நிரம்பி வழியும் வரதமாநதி நீர்த்தேக்கம்: கொடைக்கானல்

பழனியை அடுத்த கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் வரதமாநதி நீர்த்தேக்கம் நிரம்பி வழியத் துவங்கியுள்ளது.;

Update: 2021-08-24 09:21 GMT
நிரம்பி வழியும்  வரதமாநதி நீர்த்தேக்கம்: கொடைக்கானல்

கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் வரதமாநதி நீர்த்தேக்கம் நிரம்பி வழியத் துவங்கியுள்ளது.

  • whatsapp icon

பழனியை அடுத்த கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று கனமழை பெய்தது. அதன் காரணமாக மலையடிவாரத்திலுள்ள வரதமாநதி நீர்தேக்கத்திற்கு அதிக அளவில் தண்ணீர் வரத் துவங்கியது. 66 அடி உயரம் கொண்ட வரதமாநதி நீர்த்தேக்கம் ஒரே நாளில் முழு கொள்ளளவை எட்டியது. அணையிலிருந்து 101 கனஅடி தண்ணீர், ஆயக்குடி பகுதியில் உள்ள பெரியகுளம், பாப்பன்குளம், மற்றும் வீரகுளத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. முன்கூட்டியே பெய்த மழையின் காரணமாக வரதமாநதி நீர்தேக்கம் நிரம்பி வழிய துவங்கியுள்ளதால் விவசாய தேவைக்கும், குடிநீருக்கும் தண்ணீர் கிடைக்கும் என்பதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News