கொடைக்கானலில் பழுதான சாலை களை நகராட்சி நிர்வாகம் கவனிக்குமா?
கொடைக்கானல் நகராட்சி இடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்;
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் குறிஞ்சி நகரிலிருந்து கல்லறை மேடு என்னும் பகுதியை இணைக்கும் சாலை பொதுமக்கள் நடமாட முடியாத நிலையில் மிக மோசமாக உள்ளது.
இச் சாலை வழியாக செல்லும் குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகள் வயதானவர்கள் சென்றுவர மிகவும் சிரமமாக உள்ளது. பலமுறை, கொடைக்கானல் நகராட்சி இடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். உடனடியாக, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உள்ள தலையிட்டு இந்த சாலையை புதுப்பித்து பொதுமக்களின் சிரமத்தை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதிவால் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
கொடைக்கானலில் காட்டு பன்றி, காட்டெருமைகளால் பூண்டு பயிர்கள் சேதம்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான பூண்டி, கிளாவரை, கவுஞ்சி, பூம்பாறை, மன்னவனூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பூண்டு பயிரிடப்பட்டுள்ளது. தற்போது, நன்கு விளைந்து இன்னும் 20 நாட்களில் அறுவடை செய்யப்படவுள்ள நிலையில், பூண்டு பயிர்களை காட்டுப்பன்றி, காட்டெருமை, மயில் போன்றவைகள் சேதப்படுத்தியுள்ளன. இதனால், விவசாயிகள் பாதிப்பு அடைந்து வருகின்றனர். இது குறித்து வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரியுள்ளனர்.