திண்டுக்கல்லில் நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் நூதன போராட்டம்

திண்டுக்கல்லில் நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சம்பள பாக்கி வழங்க கோரி நூதன போராட்டம் நடத்தினார்கள்.;

Update: 2023-11-06 13:20 GMT

திண்டுக்கல்லில் நூறுநாள் வேலை திட்ட பணியாளர்கள் ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடத்தினார்கள்.

சின்னாளப்பட்டி அருகே வழக்கறிஞர் வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

திருட்டு

திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டி ஜெயராம் நகரில் வசித்து வருபவர் வழக்கறிஞர் தேவராஜ். இவரது  வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே சென்று, பீரோவை உடைத்து 6 பவுன் தங்க நகை, ரூ.1 லட்சம் பணம் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து, சின்னாளப்பட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொடைக்கானல்

திண்டுக்கல் மாவட்டம் ,கொடைக்கானலில் திருநங்கைகள் சுற்றுலா பயணிகளை தலையில் கை வைத்து பணம் கேட்டு மிரட்டி வருவது வாடிக்கையாக உள்ளது. கடந்த சில மாதங்களாக போலீசாரின் நடவடிக்கைகளால் கொடைக்கானலில் திருநங்கைகள் மிரட்டல் குறைந்திருந்தது.

இந்நிலையில், தற்போது பைக் மற்றும் காரில் கும்பலாக வந்து ஏரிச்சாலை, கே.ஆர்.ஆர். கலையரங்கம், நகரின் முக்கிய பகுதிகள், சுற்றுலாத்தலங்கள் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளை வழிமறித்து பணம் கேட்டு வருகின்றனர்.மேலும் மிரட்டல் அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஏரிச்சாலை பகுதியில் ,உள்ள கடைகளில் பணம் கேட்டனர். அவர்கள் பணம் தராததால், ஆத்திரமடைந்து கடையில் இருந்த பொருட்களை அள்ளிச் சென்று ரகளையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ஏரிச்சாலை, நகர் பகுதிகள் மற்றும் சுற்றுலாத்தலங்களில் உள்ள வியாபாரிகள் மற்றும் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.


விழிப்புணர்வு நிகழ்ச்சி

திண்டுக்கல் தீயணைப்பு துறையினர் சார்பாக, தீ விபத்தில் பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடி மகிழ வேண்டி, மணிக்கூண்டு அருகில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.

நூதன போராட்டம்

100 நாள் வேலை திட்டத்தில், தொழிலாளருக்கு 100 நாட்கள் வேலை வழங்க கோரியும், 15 நாட்களுக்கு ஒரு முறை சம்பளம் வழங்க கோரியும், ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை தினக்கூலியாக ரூபாய் 600 வழங்க கோரி, 100 நாள் வேலை திட்ட தொழிலாளருக்கு மூன்று மாதங்களுக்கு மேல் உள்ள சம்பள பாக்கியை உடனடியாக வழங்க கோரி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ,திண்டுக்கல் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடைபெற்றது.

கைதிகளுக்குள் சண்டை

திண்டுக்கல் மாவட்ட சிறையில் நேற்று இரவு கைதிகளுக்குள் தகராறு ஏற்பட்டது. இதன்  காரணமாக ஏற்பட்ட சண்டையில் திண்டுக்கல் வடமதுரையை சேர்ந்த ஒருவர் காயம் அடைந்தார். திண்டுக்கல் நகர் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News