செயற்கை ரசாயனம் கலந்து இனிப்பு வகைகள் தயாரித்த கடைகளுக்கு அபராதம்

திண்டுக்கல் பகுதியில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக செய்திகளை இங்கே பார்க்கலாம்;

Update: 2023-11-11 17:00 GMT

திண்டுக்கல்லில்  ரசாயன கலர் கலந்த ஸ்வீட்டுகள் பறிமுதல். செய்யப்பட்டன.

திண்டுக்கல்லில் செயற்கை ரசாயனம் கலந்து  இனிப்பு வகைகள் தயாரித்த கடைகளுக்கு அபராதம்- 15 கிலோ பறிமுதல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல்லில் மொத்தமாக ஆர்டர் எடுத்து இனிப்பு வகைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. சில கடைகளில் செயற்கை ரசாயனம் பூச்சு கலந்து இனிப்புகள் தயாரிக்கப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதனை தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வம், லாரன்ஸ் தலைமையிலான அதிகாரிகள் திண்டுக்கல் பஸ் நிலையம், திருச்சி சாலை, பழனி சாலை பகுதிகளில் உள்ள பேக்கரிகளில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அதிக அளவில் செயற்கை ரசாயன பூச்சு கலந்து சுவீட்டுகள் தயாரிக்கப்பட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 12 கடைகளில் 15 கிலோ இனிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கடை உரிமையாளர்களை எச்சரித்தனர்.

கொடைக்கானலில் போலி ஆவணங்களை தயாரித்து நிலத்தை அபகரித்தவர் கைது:

திண்டுக்கல், கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதிைய சேர்ந்தவர் சகீம். இவருக்கு சொந்தமான 5.26 ஏக்கர் நிலம் அதேபகுதியில் உள்ளது. இந்நிலையில், வில்பட்டி ஊராட்சி பேத்துப்பாறையை சேர்ந்த முத்துராமலிங்கம்(65). என்பவர் சகீம் என்பவரது பெயரிலேயே போலியாக ஆவணங்கள், ஆதார் அட்டை, கேரளா முகவரி உள்ளிட்ட ஆவணங்களை தயாரித்தார்.

கடந்த மாதம் 15-ந்தேதி நிலத்தை தனது பெயரில் பதிவு செய்து கொண்டார். இதற்கு அவரது மனைவி சாந்தி(56). என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். இந்த ஆவணங்களை கொடைக்கானல் சார்பதிவாளர் விஸ்வநாதன் சரிபார்த்தபோது, ஏற்கெனவே ,பதிவு செய்யப்பட்ட நிலத்தை மறுபடியும் போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்தது தெரியவந்தது.இதுகுறித்து, கொடைக்கானல் போலீசில் சார்பதிவாளர் விஸ்வநாதன் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து, போலீசார் கணவன்-மனைவி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, முத்துராமலிங்கத்தை கைது செய்தனர். அவரது மனைவியை தேடி வருகின்றனர்.

தற்காலிக கடைகளின் தரை வாடகை வசூலிக்கும் பணம் மாநகராட்சிக்கு சென்றடையுமா? 

திண்டுக்கல் பிரதான சாலை, கமலா நேரு மருத்துவமனை, ஆர்.எஸ்.சாலை, சாலை ரோடு உள்ளிட்ட பகுதிகளில், தரைவாடகைக்குதாற்காலிககடைகள்அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கடைகளில், பல்வேறு பொருள்களைவிற்பனை செய்து வருகின்றனர். இந்த வியாபாரிகளிடம் மாநகராட்சி சார்பில் தரை வாடகையாக ரூ.100 வசூலிக்கப்படுகிறது. இந்த வசூலை, வரி வசூலிப்பாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதவிர, அரசியல் பிரமுகர்கள், மாமன்ற உறுப்பினர் தரப்பிலும், சாலையோரங்களில்இடம் பிடித்து வசூல் நடைபெறுகிறது. அதேபோல்,நிரந்தர கடைகளின் உரிமையாளர்களும் சாலையை ஆக்கிரமித்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தரை வாடகை வசூலைப் பொருத்தவரை, கூடுதலான கட்டணச்சீட்டு அச்சடித்து கட்டணம் வசூலிக்கப்படும் வாடகைப் பணம் வசூலிக்கப்படுகிறது. பணம் முழுவதும், மாநகராட்சிக் கணக்கில் வரவு வைக்கப்படுமா என்ற கேள்வி வியாபாரிகள் இடையே எழுந்துள்ளது.

Tags:    

Similar News