கன மழையினால் கொடைக்கானலில் அனைத்து அருவிகளிலும் வெள்ளம்.

கொடைக்கானலில் கடந்த 1 வாரத்துக்கும் மேலாக பெய்து வரும் கன மழையினால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

Update: 2021-12-01 16:46 GMT

வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளி நீர் வீழ்ச்சி,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக மிதமான மழை பெய்து வந்த நிலையில் நேற்று அதிகாலை முதலே சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து சாரல் மழையும் பெய்தது.

இதனால் வெள்ளி நீர் வீழ்ச்சி அருவி, வட்டக்கானல் (லிரில்) அருவி, பாம்பார் அருவி, தேவதை அருவி, கரடிச்சோலை அருவி, உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கரை புரண்டு ஓடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் அருவிகள் மற்றும் சுற்றுலாத்தலங்களில் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. தொடர் மழையால் பொதுமக்கள் வீடுகளிலும், சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளிலும் முடங்கினர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று காலை மழை ஓய்ந்து சற்றே சூரியன் உதித்தது.

Tags:    

Similar News