திண்டுக்கல்லில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

திண்டுக்கல்லில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களின் தொகுப்பை இங்கே காணலாம்

Update: 2023-11-15 10:30 GMT

பைல் படம்

திண்டுக்கல்லில் 3 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கிடைத்த தகவலின் அடிப்படையில், மாநகர் நல அலுவலர் செபாஸ்டின் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, காமராஜ், செல்வராணி மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் தீபிகா ஆகியோர் கொண்ட குழுவினர் பேருந்து நிலையம் பகுதிகளில் 2 கடைகள், பேகம்பூர் வத்தலகுண்டு ரோடு பகுதியில் ஒரு கடை என மொத்தம் 3 கடைகளில் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட 20 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளர்களுக்கு ரூ.20 அபராதம் விதிக்கப்பட்டது.

சத்திரப்பட்டி அருகே கார் மின்கம்பத்தில் மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி, 3 பேர் படுகாயம்:

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த சத்திரப்பட்டி பைபாஸ் சாலையில் நேற்று இரவு கொச்சினில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் டயர் வெடித்து அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி சம்பவ இடத்திலேயே திருச்சி சேர்ந்த 2 இளைஞர்கள் பலியானார்கள், மேலும், 3 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து, சத்திரப்பட்டி ஆய்வாளர் கவிதா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News