பழனியில் அ.தி.மு.க. சார்பில் கிரிகெட் போட்டி : வெற்றி அணிக்கு பரிசு வழங்கல்
பழனியில் அ.தி.மு.க. சார்பில் கிரிகெட் போட்டி நடத்தி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.;
திண்டுக்கல் மாவட்டம் பழனியில், அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கி கௌரவிக்கபட்டது.
அனைத்திந்தியஅண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கட்சி தொடங்கப்பட்ட பொன் விழா ஆண்டையயொட்டி இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு இடங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே தட்டான் குளம் பகுதியில் சில நாட்களாக அ.தி.மு.க. மாணவரணி சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில், வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
அ.தி.மு.க.நகர மாணவரணி செயலாளர் மதுசூதனன் ஏற்பாட்டில் , முதல் இடம் பிடித்த பழனி டாமினேட்டர் அணிக்கு முதல் பரிசாக 25 ஆயிரம் ருபாய் மற்றும் கோப்பையை மாநில இளைஞரணி துணை செயலாளர் ரவி மனோகரன் வழங்கினார். இரண்டாம் இடம் பிடித்த பழனி போலீஸ் கேம்ப் அணிக்கு 15 ஆயிரம் மற்றும் கோப்பையை மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்வர்தீன் ,மற்றும் பன்னாடி ராஜா இணைந்து வழங்கினர். மூன்றாம் இடம் பிடித்த யுவராஜ் கிரிக்கெட் கிளப் அணிக்கு நகர மாணவரணி செயலாளர் மதுசூதனன் மற்றும் கார்த்தி இணைந்து வழங்கினர். இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம்பி. குமாரசாமி ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேணுகோபாலு , நகரச்செயலாளர் முருகானந்தம் , மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா முகமது,தகவல் தொழில் நுட்பபிரிவு மாவட்ட துணைத்தலைவர் குகன், ஒன்றிய செயலாளர்கள் , அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.