25 ஆண்டுகளுக்கு பின்பு நிரம்பிய ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி சடையன்குளம்
25 ஆண்டுகளுக்கு பின்பு ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி சடையன்குளம் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் 25 ஆண்டுகளுக்கு பின்பு ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி சடையன்குளம் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கச்சியம்மாபட்டியில் அமைந்துள்ள சடையன்குளம் சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன் விருப்பாச்சி கோபால நாயக்கர் தலைமையில் கட்டப்பட்டது,இந்த குளத்தின் மொத்த பரப்பளவு 293 ஏக்கராகும், இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு சமூக ஆர்வலர்களின் தீவிர முயற்சியால் இதன் வாய்க்கால் வரப்புகளில்கள் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு 10 அடியில் இருந்து 15 அடி வரை தூர்வாரப்பட்டு அகலப்படுத்தப்பட்டது,
இந்த நிலையில், ஒட்டன்சத்திரம் பகுதியில் பெய்து வரும் தொடர் கன மழையின் எதிரொலியாக இன்று சடையன்குளம் அதன் முழு கொள்ளளவை எட்டி தெற்குப் பகுதியில் உள்ள மறுகால் வழியாக நீர் வெளியேறி வருகிறது. இந்த நிலையில் 25 ஆண்டுகளுக்குப் பின் நிறைந்துள்ள குளத்தால், இந்தப் பகுதியில் உள்ள சுமார் 2600 ஏக்கர் நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.