ஒட்டன்சத்திரம்: ஆபத்தான மின் கம்பம்- அதிகாரிகள் மெத்தனம்
ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு உட்பட்ட சின்ன குளத்தருகில், ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை சரி செய்யாமல், மின் வாரியத்தினர் அலட்சியமாக இருப்பதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.;
ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட, சின்னக்குளம் பகுதி வழி செல்லக்கூடிய தார்சாலையில், அப்பகுதி மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். பல்வேறு பகுதிகளுக்கு இச்சாலை வழியாக, இருசக்கர வாகனங்களிலும், நடைபாதை ஆகவும் பலரும் சென்று வருகின்றனர்.
இந்த சாலையில், பழுதடைந்த மின் கம்பம் ஒன்று உள்ளது. உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம் அபாய நிலையில் உள்ளது பற்றி மின் வாரியத்தினருக்கு தகவல் தெரிவித்தும், மாற்றித்தர நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு அந்த மின் கம்பத்தை அகற்றி, உயிர்பலி ஏதும் ஏற்படாத வகையில், பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தரும்படி அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.