தடுப்பூசி போடுவது மட்டுமே தீர்வு: மாணவர் சங்கத்தினர் பிரச்சாரம்

Update: 2021-05-23 12:06 GMT

கொரோனா வைரசை இரண்டாவது அலையிலே தடுக்க 100% தடுப்பூசி போடுவது மட்டுமே நோய்த் தொற்றைத் தடுப்பதற்கான தீர்வு எனவும் பொதுமக்கள் அச்சமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும் எனவும் முன்னாள் மாணவர் சங்கத்தினர் நிலக்கோட்டை காவல்துறையினருடன் இணைந்து நகர் பகுதியில் விழிப்புணர்வு பிரச்சாரம் 

இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றில் தமிழகம் முதலிடம் வகித்து வருவதற்கு காரணம் பொதுமக்களிடையே தடுப்பூசி குறித்து இருவேறு கருத்துக்கள் நிலவி வருவதையடுத்து கொரோனா தடுப்பூசிகளான கோவிட்டீல்டு, கோவோக்சின் தடுப்புமருந்துகளின் தன்மை குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம் என்பதால் இந்தியாவிலேயே திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள பொதுமக்கள் அனைவரும் 100% தடுப்பூசி செலுத்தி கொண்டு நோய் எதிர்ப்பு ஆற்றலை பெற்று முன்மாதிரி தாலுகா திகல வேண்டும் என்பதற்காக நிலக்கோட்டை நகரின் 1977 ஆம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர் சங்கத்தினர் சார்பில் கொரானா வைரஸ் எதிர்ப்பாற்றல் பெறும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் நன்மைகள் குறித்து விளக்கும் துண்டு பிரசுர பிரச்சார விழிப்புணர்வு காவல்துறையினருடன் இணைந்து நடத்தினர்.

இதுகுறித்து நிலக்கோட்டை 1977 ஆண்டு மாணவர் சங்க தலைவர் சாதிக் அலி கூறுகையில் இந்தியாவில் குடியரசுத்தலைவர், பிரதமர், ராணுவ வீரர்கள், அனைத்து மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், மற்றும் முன்னணி நடிகர்கள் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் உட்பட அனைவரும் இந்த தடுப்பூசியை செலுத்தி கொண்ட நிலையில், பாமர பொதுமக்களிடம் இது குறித்தான சரியான விழிப்புணர்வு இல்லாததால் இருவேறு கருத்துக்கள் நிலவி வருவதும் பொதுமக்களிடம் இந்த தடுப்பூசி குறித்து அச்சம் நிலவி வருவதாலும் விவசாயிகள் மற்றும் கிராமங்கள் நிறைந்த நிலக்கோட்டை பகுதி மக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொண்டு நோய் எதிர்ப்பு ஆற்றலை பெற்று கொரானாவின் அடுத்தடுத்து வரும் கொரோனா அலைகளை விரட்ட வேண்டும் என்பதே நோக்கம் என தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News