காய்கறிகளை ரோட்டில் கொட்டி வியாபாரிகள் போராட்டம்.

நிலக்கோட்டை;

Update: 2021-05-11 15:03 GMT

நிலக்கோட்டையில் காய்கறிகளை ரோட்டில் கொட்டி வியாபாரிகள் போராட்டம்.நிலக்கோட்டையில் காய்கறிகளை ரோட்டில் கொட்டி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தினசரி காய்கறி மார்க்கெட் கூட்ட நெரிசல் காரணமாகவும் சிறிய இடமாக இருப்பதால் நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதால் காய்கறி மார்கெட்டை வெளியில் பேரூராட்சி அனுமதி அளித்த இடத்தில் கடைகளை போட சொன்னதால் வியாபாரிகள் தங்கள் விற்பனைக்காக கொண்டு வந்த காய்கறிகளை ரோட்டில் கொட்டிபோராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மார்க்கெட் பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News