கள்ள சந்தையில் விற்பதற்காக வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர்

Update: 2021-05-12 07:37 GMT

கொடைரோடு அருகேcயில் அதிக விலைக்கு விற்பதற்காக வைத்திருந்த 1355 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கள்ளச்சந்தையில் ரூ.300-ரூ.400 வரை அதிக விலைக்கு மது விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசியதகவல் கிடைத்தது.

அதன்படி அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளர் சண்முகலட்சுமி, சார்பு ஆய்வாளர் பால முத்தையா மற்றும் காவலர்கள் கிராமம் கிராமமாக நடத்திய அதிரடி சோதனையில் சிப்காட் மற்றும் பள்ளப்பட்டி பகுதியில் உள்ள தேவர்நகர் பகுதியில் வசித்து வரும் ஆனந்தஜோதி என்பவரது வீட்டில் மதுபான கடையில் விற்பது போன்று பெட்டி பெட்டியாக சுமார் ரூ.1,60,000 மதிப்புள்ள 1,355 மது பாட்டில்களை மொத்தமாக பறிமுதல் செய்தனர்..

மேலும் டாஸ்மாக் கடையில் உள்ளது போல அட்டை பெட்டியுடன் பெட்டி பெட்டியாக ஒரே வரிசை எண் கொண்ட பெட்டியாகவும் உள்ளதால் இதில் டாஸ்மாக் பணியாளர்களுக்கும், ஒரு சில காவல் துறையினருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் ஆனந்த ஜோதியை கைது செய்தனர்.

காவல்துறையினர் மதுவிலக்கு போலீசாருடன் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மதுபானக்கடை விடுமுறை நாட்களில் இதுபோன்ற கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்று லாபம் ஈட்ட நினைக்கும் இது போன்ற சமூக விரோதிகள் மீது துணிவுடன் செயல்பட்டு நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளுக்கு இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News