திண்டுக்கல்: பழைய இரும்புக் கடையில் அரசு சைக்கிள்கள் பறிமுதல்?

தாசில்தார் முத்துராமன், பழைய இரும்பு கடையில் ஆய்வு செய்தார். அப்போது, சைக்கிள்களில் அரசு முத்திரை இருந்தது தெரிய வந்தது.;

Update: 2023-04-22 09:45 GMT
திண்டுக்கல்: பழைய இரும்புக் கடையில் அரசு சைக்கிள்கள் பறிமுதல்?

பழைய இரும்பு கடையில் கிடக்கும் அரசு இலவச சைக்கிள்.

  • whatsapp icon

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளிக்கு வழங்கப்பட்ட இலவச சைக்கிள்கள் சேதம் அடைந்தன.

இந்த சைக்கிள்களை, அரசிடம் திருப்பி வழங்க முடிவு செய்தனர். ஆனால், பள்ளி நிர்வாகத்தினர் அந்த சைக்கிள்களை அரசிடம் ஒப்படைக்காமல் இரும்பு கடையில் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து, தாசில்தாருக்கு புகார்கள் வந்தது. இதனைத் தொடர்ந்து , தாசில்தார் முத்துராமன், பழைய இரும்பு கடையில் ஆய்வு செய்தார். அப்போது, சைக்கிள்களில் அரசு முத்திரை இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

பள்ளி நிர்வாகம் , சேதம் அடைந்த பொருட்களை அகற்றும் போது தவறுதலாக 11 சைக்கிள்களையும், இரும்பு கடைக்கு எடுத்து சென்றதாகவும், பின்னர் இது குறித்து அறிந்ததும் மீண்டும் எடுத்து வந்து விட்டதாகவும் தெரிவித்தனர். எனினும், கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். தவறு செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் தெரிவித்தார்.

Tags:    

Similar News