தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் இளைஞர் மாநாடு

அதியமான் கோட்டை ஊராட்சியிலுள்ள வள்ளல் அதியமான் கோட்டத்தில் தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் மாவட்ட இளைஞர் மாநாடு நடைபெற்றது.;

Update: 2022-03-12 02:59 GMT

இளைஞர் மன்றங்களுக்கு சான்றிதழ் மற்றும் விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சியிலுள்ள வள்ளல் அதியமான் கோட்டத்தில் தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் மாவட்ட இளைஞர் மாநாடு மாவட்ட வருவாய் அலுவலர் சு.அனிதா தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட அளவில் சிறந்த இளைஞர் மன்ற விருது பெற்ற அண்ணாமலைப்பட்டி இளைஞர் மன்றத்திற்கு ரூ.25,000 மற்றும் விருதினையும், பாப்பாரப்பட்டி, பொம்மிடி, மொரப்பூர் ஆகிய 3 இடங்களில் உள்ள பயிற்சி மையங்களில் தையல் கலை முடித்த 75 மகளிருக்கும், அரூர் பயிற்சி மையத்தில் கணினி பயிற்சி முடித்த 25 மகளிருக்கும் பயிற்சி முடித்தற்க்கான தொழிற்கல்வி சான்றிதழ்களையும், இளைஞர் மற்றும் மகளிர் மன்றங்களுக்கு தலா ரூ. 4000 வீதம் 10 இளைஞர் மற்றும் மகளிர் மன்றங்களுக்கு ரூ. 40,000 மதிப்பீட்டில் விளையாட்டு பொருட்களையும் மாவட்ட வருவாய் அலுவலர் சு.அனிதா வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள் )  சீனிவாச சேகர், மாவட்ட இளைஞர் மன்ற அலுவலர் பிரேம் பரத்குமார், நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர்  வேல்முருகன், பென்னாகரம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மரு.கனிமொழி, இந்தியன் வங்கியின் சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநர் அரவிந்த்குமார், நல்லம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் மகேஷ்வரி பெரியசாமி, மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில் சங்கீதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில்  ஜெயசீலன், மாவட்ட தொழில் மையம் சார்பில்  பூங்கோதை, பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் கோவிந்தராஜ், சீட்ஸ் தொண்டு நிறுவன இயக்குநர்  சரவணன் மற்றும் நேரு யுவ கேந்திரா இளைஞர்கள், மகளிர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News