பள்ளிக்குழந்தைகள் அழைத்துச் செல்லும் வாகனங்களுக்கு எச்சரிக்கை

பள்ளிக்குழந்தைகள் அழைத்துச் செல்லும் வாகனங்கள் கட்டுபாடுகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-11-06 02:38 GMT

தருமபுரி ஆட்சியர் சாந்தி.

தருமபுரி மாவட்டத்தில் பள்ளிக்குழந்தைகளை அழைத்துச் செல்லும் வாகனங்கள் கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கட்டாயம் கடைபிடிக்குமமாறு தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.  இந்த கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கட்டாயம் கடைபிடிக்களை கடைபிடிக்காத வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி விடுத்துள்ள அறிக்கையில், மோட்டார் வாகன சட்டம் 1988, பிரிவு 74, உட்பிரிவு 2-ன் படியும் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோரிக்ஷா, சுற்றுலா சீருந்து மற்றும் ஒப்பந்த ஊர்தி வாகனங்கள் கீழ்கண்ட கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்கு முறைகளை கட்டாயம் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

1. பள்ளிக் குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றிச் செல்லும் ஆட்டோரிக்ஷா, சுற்றுலா சீருந்து மற்றும் ஒப்பந்த ஊர்தி வாகனங்களின் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் சம்மந்தப்பட்ட பள்ளியில் முதல்வர் / தலைமை ஆசிரியரிடம் விண்ணப்பித்து ஒப்புதல் பெற வேண்டும்.

2. பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்காக பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி பெற்ற வாகனங்கள் தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அனுமதிச்சீட்டில் உரிய மேற்குறிப்பு செய்யப்பட வேண்டும்.

3. மேற்கண்ட அனுமதி பெற்று பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் முன்புறமும், பின்புறமும் "பள்ளிப் பணிக்காக" என்று தமிழிலும்," on school duty" என்று ஆங்கிலத்திலும் வாசகங்கள் எழுதப்பட வேண்டும்.

4. வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும். அளவிற்கு அதிகமாக பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்ல கூடாது.

5. பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் உரிய ஆவணங்களான அனுமதிச்சீட்டு, தகுதிச்சான்று, காப்புச்சான்று, புகைச்சான்று பெற்று இயக்கப்பட வேண்டும். மேலும், ஓட்டுநர்கள் தனியார் சேவை வாகனங்களுக்கான பொதுப்பணிவில்லை பெற்று இருத்தல் வேண்டும்.

6. பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தின் ஓட்டுநர்கள் பாதுகாப்பாக குழந்தைகளை ஏற்றி இறக்கி விட வேண்டும். மேலும், தேவையான இடங்களில் சாலையை கடக்க பள்ளிக் குழந்தைகளுக்கு ஓட்டுநர்கள் உதவ வேண்டும்.

மேற்கண்ட நிபந்தனைகளை மீறும் வாகனங்கள் கண்டறியப்பட்டால் வாகனத்தின் அனுமதிச்சீட்டு ரத்து செய்து மேல்நடவடிக்கை தொடரப்படும் எனவும், ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்படுகிறது.

மேலும், சொந்த பயன்பாட்டிற்கான வாகனங்களை வாடகை அடிப்படையில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்வது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், தனியார் பள்ளி நிர்வாகத்தினர் தங்கள் பள்ளிக்கு இயக்கப்படும் ஒப்பந்த வாகனங்களுக்கு உரிய அனுமதி பெறுவதற்கு பரிந்துரை செய்வதோடு கண்காணிக்கவும் தனியார் பள்ளி நிர்வாகத்தினரை கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News