வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம்
தர்மபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1.1.2024 தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தர்மபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம் இன்று முதல் 2 நாட்கள் நடக்கிறது. 1.1.2024 தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழ் நாடு தேர்தல் ஆணையம் சமீபத்தில் வரைவு வாக்களார் பட்டியலை வெளியிட்டது. அதில் விடுபட்ட மற்றும் 17 வயது முடிந்து 18 வயதில் உள்ளவர்கள் தங்கள் பெயரை சேர்த்து கொள்ளும் வகையில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
இது குறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 1.1.2024 தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள்மற்றும் 18 வயது நிறைவடைந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள், மற்றும் 17 வயது பூர்த்தி அடைந்த இளம் வாக்காளர்கள் வாக்காளர்ப ட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக் கொள்ளும் வகையில் 4ம் தேதி மற்றும் 5ம் தேதி மற்றும் 18.11.2023 மற்றும் 19.11.2023 (சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை) தேதிகளில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இந்த முகாம்களில், தகுதி யான நபர்கள் அனைவரும் அருகில் உள்ள வாக்குச் சாவடி மையங்களுக்கு சென்று, தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6 வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே வாக்காளராக பதிவு செய்துள்ளவர்கள் முகவரி மாற்றம், பெயர்திருத்தம் அல்லது வேறு தொகுதிக்கு மாற்றச்செய்ய விரும்பினால், அதற்கு படிவம் 8-ஐ பூர்த்தி செய்தும், ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்திட படிவம் 6B-யை பூர்த்தி செய்தும், வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம் அந்தந்த வாக்குச் சாவடிகளில் வழங்கலாம்.
மேலும், பொதுமக்கள் மேற்கண்ட வசதிகளை தங்கள் வீடுகளிலிருந்தே பெற www.nvsp.in என்ற இணையதள முகவரியில் Apply Online/Correction of entries என்ற Link மூலமும் விண்ணப்பிக்கலாம்.
மேலும், செல்போனில் Voters Helpline App என்ற செயலியை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், 1950 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொண்டு,கூடுதல் விவரங்கள் பெறலாம் என தெரிவித்துள்ளார்