தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பல்வேறு பணியிடங்கள்

தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-18 13:46 GMT

தருமபுரி மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படும் சகி - ஒருங்கிணைந்த சேவை மையம் (Sakthi - One Stop) Centre) பொது இடங்களில் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு அனைத்து விதமான உதவிகள் வழங்குவதற்கு செயல்பட்டு வருகிறது.

இச்சேவை மையத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை தேர்ந்தெடுக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வழக்குபணியாளர்: காலிப்பணியிடம் மொத்தம் - 4

  • மாத ஊதியம்: 15000/
  • வயது வரம்பு 40 வயதிற்குள்
  • பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
  • தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
  • 24 மணிநேரம் சுழற்சி முறையில் பணியாற்ற தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.

பல்நோக்குடதவியாளர்: காலிப்பணியிடம் மொத்தம் - 1

  • மாத ஊதியம் 6,400/
  • வயது வரம்பு 40 வயதிற்குள்
  • பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
  • தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
  • 24 மணிநேரம் சுழற்சி முறையில் பணியாற்ற தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.

பாதுகாவலர்: - காலிப்பணியிடம் மொத்தம் - 1

  • மாத ஊதியம் 10,000/
  • வயது வரம்பு 40 வயதிற்குள்
  • பெண்கள் / ஆண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
  • தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
  • 24 மணி நேரம் சுழற்சி முறையில் பணியாற்ற தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி, அனுபவம்:


விண்ணப்பங்கள் 30.03.2022 தேதி மாலை 5.45 மணிக்குள் மாவட்ட சமூகநல அலலவர், மாவட்ட சமூகநல அலுவலகம், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாவட்ட ஆட்சியரகம் கூடுதல் கட்டிடம், தருமபுரி மாவட்டம், தொலைப்பேசி எண்: 04342-233088 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ச. திவ்யதர்சினி  தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News