தர்மபுரி மாவட்டத்தில் டூவீலர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது: 9 பைக்குகள் பறிமுதல்

தர்மபுரி மாவட்டத்தில் டூவீலர் திருட்டில் ஈடுபட்டதாக 9 பைக்குகளுடன் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-26 05:30 GMT

பைக் திருட்டில் கைது செய்யப்பட்ட 3 பேர்.

தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி அதியமான்கோட்டை தொப்பூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருட்டு சம்பவம் நடைபெற்றுவந்தன.

இதனையடுத்து தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின்பேரில், தர்மபுரி காவல் துணை கண்காணிப்பாளர் வினோத் மேற்பார்வையில் தொப்பூர் காவல் ஆய்வாளர் சர்மிளா பானு தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் பெருமாள் , தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் சென்றாயன் உள்ளிட்ட போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக இருசக்கர வாகனத் திருடர்களை தேடிவந்தனர்.

இந்த நிலையில் திருசங்கோடு பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் கார்த்திகேயன் வயது 40., கோவை ஒத்தகல்மண்டபம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் வயது 50, இவர்கள் இருவரும் பைக் திருடி காரிமங்கலம் அடுத்த திண்டல் பகுதியைச் சேர்ந்த குறளரசன் வயது 29 என்பவரிடம் விற்பதும் அதனை அவர் கூடுதல் விலை வைத்து விற்றது தெரியவந்தது. இதனை அடுத்து மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 9 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News