தருமபுரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு எடை எடுக்கும் முகாம்
தருமபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலத்தின் மூலம் குழந்தைகளுக்கு சிறப்பு எடை எடுக்கும் முகாம் நடைபெற உள்ளது.;
தருமபுரி மாவட்டத்திற்குட்பட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலத்தின் மூலம் 0-6 வயதுடைய குழந்தைகளுக்கு 21.03.2022 முதல் 27.03.2022 வரை சிறப்பு எடை எடுக்கும் முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ச திவ்யதர்சினி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் துறையின் தருமபுரி மாவட்ட அலுவலத்தின் மூலம் தருமபுரி மாவட்டத்திற்குட்பட்ட 0-6 வயதுடைய குழந்தைகளுக்கு 21.03.2022 முதல் 27.03.2022 வரையிலான நாட்களில் Swastha Balak Balika Sparadha" (Healthy Child) சிறப்பு எடை எடுக்கும் முகாம் நடைபெற உள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மைய பணியாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களான NGO's, Lions Club, Rotary Cluts, Residential Welfare Associations, Youth Club, Indian Medical Associations w ith School Touchers ஆகியோருடன் இணைந்து 0-6 வயதுடைய குழந்தைகளுக்கு "Swasthu Balak Balika Sparacha" (Healthy Child) மூலம் எடை எடுக்கப்பட்டு *POSHAN TRACKER* செயலி மூலம் பதிவேற்றம் செய்து குழந்தைகளின் ஆரோக்கியம் கண்காணிக்கப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட நாட்களில் 0-6 வயதுடைய குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு அழைத்து வந்து குழந்தைகளின் எடை மற்றும் உயரத்தினை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேற்படி POSHAN TRACKER- செயலியினை 0-6 வயதுடைய குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து குழந்தைகளின் எடை மற்றும் உயரத்தினை பதிவேற்றம் செய்து வீட்டிலிருந்தபடியே தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்த (Healtry Chil) சான்றிதழை பெற்றுக்கொள்ள முடியும். மேலும் இது குறித்து தகவல்களை பெற அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தினை அணுகலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.