மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 20 பேருக்கு ஸ்கூட்டர் வழங்கல்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று (28.03.2022) நடைபெற்றது.

Update: 2022-03-28 15:41 GMT

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஸ்கூட்டர்களை வழங்கி ஆட்சியர் ச.திவ்யதர்சினி.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர்  தலைமையில் இன்று (28.03.2022) நடைபெற்றது.

இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கல்வி உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், சலவைப்பெட்டி, பசுமை வீடு, பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், வாரிசு சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ், பேருந்து வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், வேலைவாய்ப்பு , வீட்டுமனை பட்டா, புதிய மின் இணைப்பு வசதி, முதியோர் ஓய்வூதியத் தொகை, இதர உதவித் தொகைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வேண்டியும் 469 மனுக்கள் வரப்பெற்றன.

இம்மனுக்களை பெற்றுகொண்ட  ஆட்சியர் ச.திவ்யதர்சினி,  அம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, இக்கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்ட 20 மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட தலா ரூ.99,500 வீதம் ரூ.19.90 இலட்சம் மதிப்பிலான 20 பெட்ரோல் ஸ்கூட்டர்களை  அவர் வழங்கினார்.

இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் .சு அனிதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்)  வி.கே.சாந்தி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயக்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி உட்பட  அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News