பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களுக்கு உதவித்தொகை

ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி.,யில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-25 03:22 GMT

பைல் படம்.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி.,யில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் சாந்தி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்  சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சோந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ/ மாணவியருக்கு ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2.00 இலட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

மேற்படி கல்வி உதவித்தொகைக்கு 2022-23 ம் கல்வியாண்டில் புதியது(Fresh Applications) விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் கீழ்கண்ட முகவரியிலுள்ள இயக்ககத்தையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்டுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகியோ அல்லது http://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship_schemes என்ற இணையதள முகவரியிலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் மேற்படி 2022-23 ம் நிதியாண்டிற்கான புதியது கல்வி உதவித்தொகை விண்ணப்பித்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்புக் கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை- 5. தொலைபேசி எண் 044-29515942, மின்னஞ்சல் முகவரி tngovtitscholarship@gmail.com முகவரிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 31.01.2023 க்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்:

ருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று 25.11.2022 வெள்ளிக்கிழமை  காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற உ உள்ளது

தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது கோரிக்கைகளையும், கருத்துகளையும் தெரிவித்து பயன்பெறலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று 25.11.2022 வெள்ளிக்கிழமை  காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

எனவே, இவ்விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது கோரிக்கைகளையும், கருத்துகளையும் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News