தர்மபுரியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்:கலெக்டர் தகவல்

தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது;

Update: 2023-06-15 03:44 GMT

பைல் படம்.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.

இந்த முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான விற்பனையாளர்கள், மார்க்கெட்டிங் பிரதிநிதிகள், மேற்பார்வையாளர்கள், மேலாளர்கள், கணினி ஆபரேட்டர்கள், கணக்காளர்கள், மெக்கானிக் போன்ற பணிகளுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் பள்ளிப்படிப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு என அனைத்து விதமான கல்வித்தகுதி கொண்ட இளைஞர்கள், பெண்கள் கலந்து கொள்ளலாம். தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது.

அரசு துறைகளில் பணி வாய்ப்பை பெற அவர்களுடைய பதிவுமூப்பின்படி நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு அனுப்பப்படும். எனவே தனியார் துறைகளில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News