அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் இ-சேவை மையத்தில் முதன்மை செயலாளர் ஆய்வு
தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அரசு முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தருமபுரி மாவட்டம், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தினையும், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் அரசு இ-சேவை மையத்தினையும் அரசு முதன்மை செயலாளர் / தொழிலாளர் நல ஆணையர் / தருமபுரி மாவட்ட தருமபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அதுல் ஆனந்த் ஆய்வு மேற்கொண்டு, அங்கு அளிக்கப்பட்டு வரும் சேவைகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத்தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், பெரியாம்பட்டி ஊராட்சியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் ரூ.60.73 இலட்சம் மதிப்பீட்டில் 99 சமத்துவபுர வீடுகளில் பழுதுநீக்கப்பணிகள் மற்றும் தெருவிளக்குகள், அங்கன்வாடிமையம், சமுதாயக்கூடம், நூலகம், நியாய விலைக்கடை உள்ளிட்ட பல்வேறு வகையான 31 அடிப்படை வசதிகள் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அதுல் ஆனந்த், அங்கு அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தினையும், காரிமங்கலம் வட்டம், பெரியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள அங்கன்வாடி மையத்தினையும், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு. குழந்தைகளிடம் கலந்துரையாடி, அக்குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு குறித்தும், குழந்தைகளுக்கு கற்பித்தல் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர், பெரியாம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த சி.மாரியப்பன் (வயது:75) அவர்கள் நாட்பட்ட சிறுநீரக நோய் பாதிப்பு காரணமாக, தொடர்நிலை வயிற்று சவ்வு சுத்திகரிப்பு சிகிச்சை முறையின் மூலம் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் நோயாளியின் இல்லத்திலேயே டயாலிஸிஸ் சிகிச்சை எடுத்துகொள்வதற்கு மக்களைத் தேடி மருத்துவத் திட்ட நோய் ஆதரவு செவிலியர்கள் மூலம் டயாலிஸிஸ் பைகள் வழங்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து, காரிமங்கலம் வட்டம், பெரியாம்பட்டி ஊராட்சி, பூலாம்பட்டியில் உள்ள ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அவ்விடுதியில் தங்கி பயிலும் மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் இதர வசதிகள் குறித்தும், விடுதியின் அடிப்படை வசதிகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
பின்னர் அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கு சென்றடைவதையும், மக்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்பாட்டு பணிகளையும், நலத்திட்ட உதவிகளையும் முழுமையாக செயல்படுத்தி, மாவட்டத்தின் வளரச்சிக்கும், மாவட்ட மக்களின் மேம்பாட்டிற்கும் சிறப்பாக பணியாற்றுவதோடு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் திட்டங்கள் சென்றடைவதை துறை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வுகளின்போது மாவட்ட வருவாய் அலுவலர் சு.அனிதா, தருமபுரி கோட்டாட்சியர் (Gum) 1 மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெ.ஜெயக்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மரியம் ரெஜினா, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் சௌண்டம்மாள், தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், தருமபுரி வருவாய் வட்டாட்சியர் தன.ராஜராஜன், காரிமங்கலம் வருவாய் வட்டாட்சியர் சுகுமார், ஒருங்கிணைந்த குழந்தை வளரச்சி பணிகள் திட்ட மாவட்ட திட்ட அலுவலர் / மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) ஜான்சிராணி, காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கலைவாணி, தொழிலாளர் நலத்துறை சேலம் இணை ஆணையர் எல்.ரமேஷ், உதவி ஆணையர் (அமலாக்கம்) சி.வெங்கடாஜலம், உதவி ஆணையர் (ச.பா.தி) சி.முத்து உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.