தருமபுரி மாவட்டத்தில் 4 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி

தருமரி மாவட்டத்தில் 4 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்கப்படுகிறது.

Update: 2022-09-02 07:29 GMT

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி.

விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட நான்கு இடங்களில் கரைப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து கொண்டே வந்ததாலும், பாதுகாப்பு கருதியும் விநாயகர் சிலைகளை ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கரைப்பதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது நீர்வரத்து குறைந்துகொண்டே வருவதால் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல்லில் விநாயகர் சிலை கரைப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

மேலும், தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட ஒகேனக்கல் உட்பட தெண்பெண்ணையாறு (இருமத்தூர்) நாகாவதி அணை, தொப்பையாறு அணை ஆகிய நான்கு இடங்களில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News