தர்மபுரியில் நவீன கண்காணிப்பு வசதியுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை திறப்பு

தர்மபுரியில் நவீன கண்காணிப்பு வசதியுடன் கூடிய கட்டுப்பாட்டு அறையை மாவட்ட கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்.

Update: 2022-03-17 12:08 GMT

நவீன காவல் கண்காணிப்பு வசதியுடன் கூடிய கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வன்.

தருமபுரி மாவட்டம்,  துரைசாமி நாயுடு தெருவில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தம், நவீன காவல் கண்காணிப்பு வசதியுடன் கூடிய கட்டுப்பாட்டு அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் காவல் துணைக் கண்காணிப்பாளர் வினோத், நகர காவல் நிலைய ஆய்வாளர் நவாஸ், காவல் உதவி ஆய்வாளர்  சுந்தரமூர்த்தி, தருமபுரி நகை கடை வியாபாரிகள் சங்கத்தினர் உடன் இருந்தனர்.

இந்த கட்டுப்பாட்டு அறையில் 32 / 5 MP நைட் விஷன் கேமராக்களை இணைக்கிறது. இது தருமபுரியில் உள்ள நகைக்கடைகளின் முக்கியமான தெருக்களை உள்ளடக்கும் வகையில் சுமார் 10 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

சமூகக் காவல் பணியின் விளைவாக , உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி மற்றும் அவரது குழுவினர் நகை வியாபாரிகள் சங்கத்தை அணுகி இந்த வசதியை ஏற்படுத்தித் தரும்படி கோரிக்கை விடுத்ததன் பெயரில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

குற்றங்களைத் தடுப்பதில் சிசிடிவிகளின் முக்கியத்துவத்தைப் பற்றி காவல் கண்காணிப்பாளர் உரையாற்றினார். இதன் மூலம் நகரில் உள்ள கட்டுப்பாட்டு அறைகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News