தேசிய அளவிலான வாக்காளர் விழிப்புணர்வு போட்டி: வரும் 31 வரை விண்ணப்பங்கள் ஏற்பு
தேசிய அளவிலான வாக்காளர் விழிப்புணர்வு போட்டிக்கான விண்ணப்பங்கள் வரும் 31 வரை ஏற்றுக்கொள்ளப்படுவதாக தர்மபுரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.;
"எனது வாக்கு எனது எதிர்காலம் : ஒரு வாக்கின் வலிமை'' ஐந்து பிரிவுகளைக் கொண்ட இப்போட்டிக்கான விண்ணப்பங்கள் 31.03.2022 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய தேர்தல் ஆணையமானது தேசிய அளவிலான வாக்காளர் விழிப்புணர்வு போட்டியினை "எனது வாக்கு எனது எதிர்காலம் ! ஒரு வாக்கின் வலிமை" என்பதன் அடிப்படையில் நடத்தி வருகிறது.
இந்த போட்டியில் வினாடி வினாப் போட்டி, காணொலிக் காட்சி (ஏனைநழ) தயாரிக்கும் போட்டி, பாட்டுப் போட்டி, விளம்பரப்பட வடிவமைப்பு போட்டி, வாசகம் எழுதுதல் போட்டி ஆகிய தலைப்புகளில் நடைபெறுகிறது.
இதில் வாக்காளர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமான பதிவுகளை விளம்பரப்படம், காணொலிக் காட்சி, பாடங்கள் மற்றும் வாசகங்கள் போன்ற வடிவத்தில் voter-contest@ecl.gov.in என்ற மின்ன ஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். சிறந்த பதிவுகளுக்கு அற்புதமான பணப்பரிசுகள் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்படும். இப்போட்டியில் கலந்து கொள்வதற்கான கடைசி தேதி 31.03.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், தகவல்களைப் பெறுவதற்கு https://voterawarenesscontest.in/ என்ற இணையதளத்தை அணுகலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதார்.