சேறும், சகதியுமாக மாறிய தார்ச்சாலை: சீரமைக்க கோரிக்கை

பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்;

Update: 2023-10-18 16:10 GMT

சேறும் சகதியுமாக காணப்படும் சாலை

தர்மபுரி மாவட்டம் உங்கரானஅள்ளி மற்றும் இலக்கியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள ராமன் நகரில்

இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மண்சாலை மட்டுமே உள்ளது. இச்சாலை வழியாக ஏமக்குட்டியூர், வத்தல்மலை, நூலஅள்ளி, மொடக்கேரி, எட்டிமரத்துபட்டி, உழவன் கொட்டாய் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல வேண்டும்

மழைக்காலங்களில் சாலை சேறும் சகதியுமாக மாறிப்போவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்ல கூட முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் புதிய தார் சாலை அமைத்து தரக் கோரி ஊராட்சி மன்றம் சார்பாக நடைபெற்ற கிராம சபை கூட்டம் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பல முறை புகார் தெரிவித்துள்ளனர். ஆனாலும் சாலை சீரமைக்கப்படவில்லை.

கடந்த இரு நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் சாலையில் நடந்து செல்ல முடியாமல் மழை நீருடன் சேறும் கலந்ததால் நடக்க முடியாத அளவுக்கு சகதியாக மாறியுள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ராமன் நகர் மற்றும் அதியமான் நகர் பகுதிக்கு முறையான சாலை வசதி, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த இரு நாட்களாக பெய்து வரும் சாதாரண மழைக்கே இந்த நிலைக்கு ஏற்பட்டு உள்ளது.

இந்த சாலை குண்டும் குழியுமாக சேறும் சகதியமாக உள்ளது. இந்த வழியில் நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரு சக்கரத்தில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கின்றனர். மேலும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த சாலையை உடனடியாக சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News