தர்மபுரியில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

இ பைலிங் முறை கட்டாயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-11 13:46 GMT

கீழமை நீதிமன்றங்களில் இ-பைலிங் முறை கட்டாயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தர்மபுரி வழக்கறிஞர்கள் பார் அசோசியேஷன் சார்பில் இன்று வக்கீல்கள் ஒரு நாள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக கீழமை நீதிமன்றங்களில் இ-பைலிங் முறையை நிறுத்தி வைக்க கோரி தர்மபுரி வழக்கிறஞர்கள் பார் அசோசியேஷன் சார்பில் வக்கீல்கள் இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து தர்மபுரி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சந்திரசேகரன் தலைமையில் வக்கீல்கள் தடங்கம் பகுதியில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோன்று பென்னாகரம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கீழமை நீதிமன்றங்களில் இ-பைலிங் முறை கட்டாய மாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பென்னாகரம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன்பு இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு பென்னாகரம் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார், மூத்த வழக்கறிஞர் அசோகன் முன்னிலை வகித்தார்.

இதில் கீழமை நீதிமன்றங்களில் இபைலிங் முறை கட்டாயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதில் பென்னாகரம் வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் மாதையன், ஜானகிராமன், முன்னாள் துணை தலைவர் வேலு மற்றும் வழக்கறிஞர்கள், சங்க நிர்வாகிகள் மகாலிங்கம், சரவணன், தமிழரசன், நூலகர் வெங்கடேசன் உட்பட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News