காவேரிபட்டிணம் அனுமதியின்றி மணல் கடத்திய டிராக்டர் வாகனம் பறிமுதல்
காவேரிபட்டிணம் அனுமதியின்றி மணல் கடத்திய டிராக்டர் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், காவேரிபட்டிணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாரிகவுண்டன் சவுளூர் கிராமம் அருகே அவ்வழியாக வந்த டிராக்டர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் தென்பெண்ணை ஆற்றில் அனுமதியின்றி ஒரு யூனிட் மணல் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டரை காவல் நிலையம் கொண்டு வந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.