தர்மபுரி மாவட்ட விவசாயிகள் வங்கிக்கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தல்

தர்மபுரி மாவட்ட விவசாயிகள் வங்கிக்கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2022-04-05 14:14 GMT

பைல் படம்.

பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வேளாண் இடு பொருட்கள் வாங்கும் பொருட்டு ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 2,17,301 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்த தேதியை பொறுத்து விவசாயிகளுக்கு 10 தவணை வரை தொகைகள் வரப்பெற்றுள்ளது. மத்திய அரசு தற்போது திட்டநிதி விடுவிப்பில் மாற்றம் கொண்டு வந்துள்ளது.

இதுவரை வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நிதி விடுவிப்பு செய்து வந்த நிலையில் இனி திட்ட நிதியானது ஆதார் எண் அடிப்படையில் விடுவிக்கப்படும். தற்போது விவசாயிகள் 11-வது தவணை தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் எண்ணை வங்கி எண்ணோடு இணைப்பது அவசியமாகும்.

தங்களது ஆதார் எண்ணை வங்கி எண்ணோடு இதுவரை இணைக்காத விவசாயிகள் உடனடியாக தங்கள் வங்கி கிளைக்கு ஆதார் மற்றும் வங்கி பாஸ் புத்தகத்துடன் சென்று இணைத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News