தருமபுரி மாவட்டம் ஊரடங்கு விதிமீறல்; 109 வழக்குகள் பதிவு
தருமபுரி மாவட்டத்தில் முழு ஊரடங்கின்போது விதிகளை மீறியதாக 109 வழக்குகள் பதிவு.;
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையொட்டி போலீசார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டத்தில் இருந்து அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் வந்த வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் உரிய சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன.
இந்நிலையில், முழு ஊரடங்கின்போது சாலைகளில் விதிகளை மீறி பல பேர் வாகனங்களில் சென்றனர். தேவையின்றி பொது இடங்களில் முககவசம் அணியாமல் சுற்றித் திரிந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுவரை மாவட்டம் முழுவதும் 109 வழக்குகள் பதிவாகியுள்ளது. மேலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.