தர்மபுரி மாவட்டம் முழுவதும் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை

இரவு முழுவதும் விடிய விடிய நல்ல மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனர்.;

Update: 2023-11-07 11:38 GMT

பைல் படம்

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்று சுழற்சியின் காரணமாக கடந்த வாரத்தில் இருந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

தொடர்ந்து அடுத்த 10 நாட்கள் வரை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என்று வானிலை நிலையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், தென் உள் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், மேற்கு உள் மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழையும், ஆங்காங்கே கனமழையும் பெய்து வருகிறது.

இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் தொடர்ந்து ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. வானம் மேகமூட்டத்துடன் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் இருந்து மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பெய்ய தொடங்கியது. இதனையடுத்து இரவு முழுவதும் விடிய விடிய நல்ல மழை பெய்துள்ளது.

மாவட்டத்தில் பெய்த மழை அளவு:

தர்மபுரி 20 மில்லி மீட்டர், பாலக்கோடு 83.2, மில்லிமீட்டர், மாரண்டஅள்ளி 22. மில்லி மீட்டர், பென்னாகரம் 52. மில்லி மீட்டர், ஒகேனக்கல் 5.4 மில்லி மீட்டர், அரூர் 11.2 மில்லி மீட்டர், நல்லம்பள்ளி 51 மில்லி மீட்டர் என மாவட்டத்தில் மொத்தம் 255.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது, அதிகபட்சமாக பாலக்கோட்டில் 83.2 மி.மீ பதிவானது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனர்.

Tags:    

Similar News