தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வரும் 23ம் தேதி அரசு வாகனம் ஏலம்
தர்மபுரியில் வரும் 23ம் தேதி அரசு வாகனம் ஏலம் விடப்படுவதாக வட்டார போக்குவரத்து அலுவலகம் தெரிவித்துள்ளது.
தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அரசு வாகன எண். TN 07 G 2709 Mahinda Commander கழிவு செய்யப்பட்டுள்ளது. கழிவு செய்யப்பட்ட வாகனம் வருகின்ற 23.03.2022 புதன்கிழமை அன்று பிற்பகல் 3 மணிக்கு தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படவுள்ளது.
மேற்படி ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கலந்துகொண்டு விலைப்புள்ளியை கோரலாம் என தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகம் தெரிவித்துள்ளது.