தர்மபுரியில் வரும் 24ம் தேதி தீயணைப்பு தண்ணீர் லாரி ஏலம்
தர்மபுரியில் வரும் 24ம் தேதி தீயணைப்பு தண்ணீர் லாரி ஏலம் விடப்படுவதாக மாவட்ட தீயணைப்புத்துறை வெளியிட்டுள்ளது.;
தருமபுரி தியணைப்பு-மீட்புப்பணி நிலையத்தில் அரசு தண்ணீர் லாரி த.நா-29 அ-0117 (அசோக்லைலேண்ட்) கழிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தை 24-03-2022 அன்று முற்பகல் 11:30 மணியளவில் தருமபுரி தீயணைப்பு-மீட்புப்பணி நிலைய வளாகத்தில் பொது ஏலம் விடப்படவுள்ளது.
ஆரம்ப ஏல விலையாக ரூ.1,40,000/- (ரூபாய் ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் மட்டும்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் விலைப்புள்ளியை கோரலாம் என மாவட்ட தீயணைப்பு-மீட்புப்பணிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.