தருமபுரியில் வரும் 25ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 25ம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-03-21 15:09 GMT

தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 25ம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர்  ச திவ்யதர்சினி வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நான் கூட்டம் வருகின்ற 25ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 11.00 மணியாவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெறஉள்ளது.

எனவே, கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும், கோரிக்கைகளையும், கருத்துகளையும் எடுத்துக் கூறி பயனடையுமாறு கேட்டுக்கொன்னப்படுகிறது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News