ரூ.56 ஆயிரத்தை மீட்டுக்கொடுத்த தருமபுரி சைபர் கிரைம் போலீசார்

போலி ஆவணம் மூலம் பறிகொடுத்த ரூ.56 ஆயிரத்தை தருமபுரி சைபர் கிரைம் போலீசார் மீட்டுக்கொடுத்தனர்.

Update: 2022-03-15 02:51 GMT

போலி ஆவணம் மூலம் பறிகொடுத்த ரூ.56 ஆயிரத்தை உரியவரிடம் ஒப்படைத்த தருமபுரி சைபர் கிரைம் போலீசார்.

தருமபுரி மாவட்டம், தருமபுரி நகரில் உள்ள சத்திரம் மேல் நகர் பகுதியை சேர்ந்த எம்.ஸ்ரீகாந்த் என்பவரின் மொபைலுக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து வரப்பெற்ற குறுஞ்செய்தியில் 24 மணி நேரத்திற்குள் ஆவணங்களை அப்டேட் செய்யாவிடில் உங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என வந்துள்ளது.

இந்த குறுஞ்செய்தியை உண்மை என நம்பி, அதில் இருந்த Link-ஐ கிளிக் செய்து தன்னுடைய வங்கிக் கணக்கில் Net banking User ID Password மற்றும் OTP-களை பதிவு செய்த சில மணி துளிகளில் அவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.4,41,674-/- பணம் காணாமல் போனது.

இழந்த பணத்தை மீட்டுத்தர சைபர் கிரைம் உதவி எண்:1930-ஐ அழைத்து புகாரை பதிவு செய்தார். புகாரை பெற்றவுடன் விரைவாக செயல்பட்டு தருமபுரி சைபர் கிரைம் போலீசார் உடனடியாக வங்கியை தொடர்பு கொண்டு பணத்தை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு ரூபாய் 56 ஆயிரம் பணம் மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட பணத்தை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.சி.கலைச்செல்வன்.ஐ.பி.எஸ்., அவர்கள் பாதிக்கப்பட்ட எம்.ஸ்ரீகாந்த் என்பவரிடம் ரூபாய் 56 ஆயிரத்தை ஒப்படைத்தார். பின்பு இதுபோன்ற பணமோசடி புகார்களுக்கு 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணை உடனடியாக தொடர்புகொள்ளவும் , www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

மேலும் போலியான குறுஞ்செய்திகளை நம்பி உங்களது வங்கிக் கணக்கின் தகவல்களான AC/No, ATM Card Pin, MPIN, CVV No,Debit card Details,OTP,Net banking,User name, Credit card No விவரங்களை செல்போனில் யாரிடமும் சொல்ல வேண்டாம் எனவும் ஏசி ஃபேன் ஆதார் KYC/PAN/AADAR card update செய்ய சொல்லியும் உங்கள் தொலைபேசி எண் இலட்சக்கணக்கான பரிசு தொகை தேர்வாகி உள்ளது எனவும் குறைந்த வட்டிக்கு அதிக லோன் தருவதாகவும் வரும் SMS Call E-mail, WhatsApp. Message, Link- களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News