துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற அதிகாரிகளுக்கு டிஜிபி பாராட்டு

துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற அதிகாரிகளுக்கு டிஜிபி பாராட்டுகளை தெரிவித்தார்.;

Update: 2022-03-12 14:53 GMT

துப்பாக்கி சுடும் போட்டியில் பதங்களை வென்ற காவல் அதிகாரிகள்.

சென்னை, மருதம் வளாகத்திலுள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஐ.பி.எஸ் அதிகாரிகள் துப்பாக்கி சுடும் போட்டியில் 36 ஐபிஎஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் பிஸ்டல் பிரிவில் வெற்றிபெற்றவர்கள்:

1.  ஸ்ரீஅபிநவ், காவல் கண்காணிப்பாளர், சேலம் மாவட்டம்.

2. முனைவர் செ.சைலேந்திரபாபு, காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் ஆர்.திருநாவுக்கரசு,  காவல் கண்காணிப்பாளர், முதலமைச்சரின் உள்வட்ட பாதுகாப்பு பிரிவு.

3. மருத்துவர் கே.கார்த்திகேயன், காவல் துணை ஆணையர், கீழ்ப்பாக்கம்,  நிஷா பார்த்திபன், காவல் கண்காணிப்பாளர், புதுக்கோட்டை மாவட்டம்.  பிரவேஸ் குமார், காவல் துணைத் தலைவர், திருநெல்வேலி சரகம் மற்றும் இ.சாய் சரண் தேஜஸ்வி, காவல் கண்காணிப்பாளர், கிருஷ்ணகிரி.

இன்சாஸ் பிரிவில்

1. மருத்துவர் கே.கார்த்திகேயன்¸  காவல் துணை ஆணையர், கீழ்ப்பாக்கம்.

2.  நிஷா பார்த்திபன்,  காவல் கண்காணிப்பாளர், புதுக்கோட்டை.

3. முனைவர் செ.சைலேந்திரபாபு,  காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும்  ஆர்.திருநாவுக்கரசு, காவல் கண்காணிப்பாளர், முதலமைச்சரின் உள்வட்ட பாதுகாப்பு பிரிவு.

ஒட்டுமொத்த சிறந்தவர்கள் பிரிவில்

1. மருத்துவர் கே.கார்த்திகேயன்¸ காவல் துணை ஆணையர், கீழ்ப்பாக்கம்.

2. நிஷா பார்த்திபன், காவல் கண்காணிப்பாளர், புதுக்கோட்டை.

3. முனைவர் செ.சைலேந்திரபாபு, காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும்  ஆர்.திருநாவுக்கரசு, காவல் கண்காணிப்பாளர், முதலமைச்சரின் உள்வட்ட பாதுகாப்பு பிரிவு.

வெற்றி பெற்ற காவல் அதிகாரிகளுக்கு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் முனைவர் செ.சைலேந்திரபாபு  பதக்கங்கள் மற்றும் கேடயங்கள் வழங்கினார்.

இப்போட்டியில் கூடுதல் காவல் இயக்குனர்கள் மகேஷ்குமார் அகர்வால்  (குற்றப்பிரிவு மற்றும் அமலாக்கப்பிரிவு), பி. அமல்ராஜ்  (செயலாக்கம்)¸  ஆர்.சுதாகர்  காவல்துறை தலைவர் மேற்கு மண்டலம் மற்றும் காவல் அதிகாரிகள் பதக்கங்கள் பெற்றனர்.

Tags:    

Similar News