தார் சாலை அமைக்க கோரி மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்
மண் சாலையை தார் சாலையாக அமைத்து தர மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார்;
தர்மபுரி மாவட்டம் சித்தேரி மலைப்பகுதியில் வாச்சாத்தி முதல் அரசநத்தம், அக்கரைக்காடு, கலசப்பாடி, கோட்டக்காடு, ஆலமரத்து வளைவு, கருக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5000 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.
மேலும் இந்த கிராமங்களில் இருந்து பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் கர்ப்பிணிகள் மற்றும் முதியோர்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கும் பயணம் செய்ய சாலை வசதி இல்லாததால் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இதனால் இச்சாலையை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் பங்களிப்போடு மண் சாலை அமைக்கபட்டது. இந்த மண் சாலையை தார் சாலையாக அமைத்து தர மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இன்று வரை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தார் சாலை அமைக்கவில்லை.
இது சம்பந்தமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தர்மபுரி தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலசப்பாடி மலை கிராமத்திற்கு கொடியேற்ற வந்தவர் இங்குள்ள ஏழு மலை கிராம மக்களை ஒன்று திரட்டி உங்களுக்கு 28 கோடி மதிப்பில் மண்சாலை தார் சாலையாக அமைக்கும் திட்டம் தி.மு.க அரசால் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இன்னும் ஒரு சில மாதங்களில் மண் சாலையாக உள்ள சாலையை தார்சாலையாக மாற்றி அமைக்கப்படும் என கூறினா. ஆனால் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதளை கண்டிக்கும் வகையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மலைநாடு பழங்குடியினர் மற்றும் விவசாயிகள் முன்னேற்ற சங்கம் நிருவன தலைவர் ராமசாமி தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், இன்னும் ஒரு மாத காலத்திற்குள் இங்குள்ள மலை கிராமத்திற்கு செல்லும் மண் சாலைகளை தார் சாலைகளாக அமைக்காவிட்டால் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை இந்த ஏழு மலை கிராம மக்களும் புறக்கணிப்போம். மேலும் தமிழக அரசு வழங்கிய குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து விட்டு ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை தொடர்வோம் என எச்சரிக்கை விடுத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மலைவாழ் மக்களின் தேனாண்டை லட்சுமண குருக்களுடன் பாரம்பரிய உடையணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைதொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 200 க்கும் மேற்பட்ட மலை வாழ் மக்கள் கலந்து கொண்டனர்.