பழைய விலையிலேயே உரம் விற்கப்படும்.. வேளாண் இணை இயக்குனர் தகவல்.!

Update: 2021-05-29 04:02 GMT

தருமபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வசந்த ரேகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேளாண் இடு பொருட்கள், விதை மற்றும் உரம் தடையின்றி விவசாயிகளுக்கு கிடைத்திட அனைத்து வேளாண் விரிவாக்க மையங்கள், தனியார் விதை, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை நிலையங்களும் அரசு உத்தரவின்படி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன.

மேலும், ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வேளாண்மைத்துறை அலுவலர்கள், விவசாயிகளை சந்தித்து தொழில் நுட்பங்கள் மற்றும் மானியத்திட்ட விபரங்கள் குறித்து கூறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் விவசாயிகள் தங்கள் தேவைகளுக்கு சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை செல்போனில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தருமபுரி வட்டாரம் 9442235265, பென்னாகரம் வட்டாரம் 85267 19919, காரிமங்கலம் வட்டாரம் 94432 07571, பாலக்கோடு வட்டாரம் 90803 00345, நல்லம்பள்ளி வட்டாரம் 94436 35600, அரூர் வட்டாரம் 94435 73870, மொரப்பூர் வட்டாரம், 91502 64477, பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரம் 94430 81440 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், மத்திய அரசு டிஏபி உரமானியத்தை உயர்த்தி உள்ளதால், பழைய விலைக்கு விற்பனை நிலையங்களில் கிடைக்கும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால், வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) 94435 63977 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News