தர்மபுரி மாவட்டத்தில் 7பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்;

Update: 2022-01-04 16:45 GMT

தர்மபுரி மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்.

மாவட்டத்தில் தற்போது 56 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 281 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

மாவட்டம் முழுவதும் இந்த தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 29,032

குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 28,695 பேர் 

Tags:    

Similar News