ஏரியூா் அருகே மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ஆட்சியர் பங்கேற்பு
135 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் மற்றும் சொட்டுநீா்ப் பாசன உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் சாந்தி வழங்கினர்;
தர்மபுரி மாவட்டம், ஏரியூா் அருகே பத்ரஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட பூச்சூரில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமை தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் சாந்தி பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பூச்சூா் பகுதி 14 குக்கிரா மங்களை உள்ளடக்கியது. இக்கிராமங்களுக்கு குடிநீா் வசதிகள் செய்து தரப்பட்டு, அங்கன்வாடி மையம், கழிப்பறை வசதி உள்ளிட்ட மீதமுள்ள வளா்ச்சித் திட்டப் பணிகள் விரைந்து முடித்திட போதுமான நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன.
பெரும்பாலை முதல் சாணாரப்பட்டி வரை செல்லும் சாலை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். மேலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டம், சமூக நலத்துறை, தோட்டக்கலைத் துறை, மீன்வளத் துறை, பழங்குடியினா் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மாவட்ட தொழில்மையம் உள்ளிட்ட துறையின் சார்பில் துறைசார்ந்த அலுவலா்கள் தங்களின் துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டம், அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் எடுத்துரைத்துள்ளனா்.
இந்தப் பகுதியில் உயா்கல்வி தொடரும் பெண்களின் எண்ணிக்கையை உயா்த்தும் வகையில், உயா்கல்வி பயிலும் மகளிருக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட மகளிருக்கான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மேலும், அரசால் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளா்ச்சிச் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கலைஞரின் மகளிர் உரிமைத் திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் முழுமையாகத் தெரிந்து கொண்டு தகுதியான பயனாளிகள் விண்ணப்பித்து பயனடைய வேண்டும்.
இந்த மக்கள் தொடா்பு திட்ட முகாமில் வழங்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கை மனுக்களும், ஏற்கெனவே பரிசீலனையில் உள்ள மனுக்களும் உரிய முறையில் கள ஆய்வு செய்யப்பட்டு தகுதியான பயனாளிகள் அனை வருக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.
அதனைத் தொடா்ந்து, 110 பயனாளிகளுக்கு ரூ. 34.47 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், வாக்காளா் அடையாள அட்டைகள், திருமண உதவித்தொகை, விபத்து நிவாரண உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை, வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சார்பில் 16 பயனாளிகளுக்கு ரூ. 6.27 லட்சம் மதிப்பீட்டில் சொட்டுநீா்ப் பாசன உபகரணங்கள், மா ஒட்டுச்செடி, தக்காளி நாற்று, துவரை விதைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளி்ர் திட்டம் சார்பில் ஆறு மகளி்ர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் கடன் உதவிகளையும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் மூன்று பயனாளிகளுக்கு ரூ. 26,000 மதிப்பீட்டில் 3 சக்கர சைக்கிள் என மொத்தம் 135 பயனாளிகளுக்கு ரூ. 44 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னா் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்
இம்முகாமில் பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ஜி.கே.மணி, கோட்டாட்சியா் கீதாராணி, தனி துணை ஆட்சியா் சையது ஹமீது, ஏரியூா் ஒன்றியக்குழு தலைவா் பழனிசாமி, ஒன்றியக் குழு உறுப்பினா் மயில்சாமி, பத்ர அள்ளி ஊராட்சி மன்றத் தலைவா் சீரங்காயி தங்கராஜ், பென்னாகரம் வட்டாட்சியா் ராதாகிருஷ்ணன், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனா்.