தர்மபுரியில் சிறுதானிய பயிர்சாகுபடி விழிப்புணர்வு பிரசாரம்
தர்மபுரி மாவட்டத்தில் சிறுதானிய பயிர் சாகுபடி விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாவட்டஆட்சியர் தொடங்கி வைத்தார்.;
உலக சிறுதானிய ஆண்டினை முன்னிட்டு தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் - ஊட்டமிகு சிறுதானியங்கள் திட்டத்தின் சார்பில் சிறுதானிய விழிப்புணர்வு பிரசார வாகனம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரத்திற்கும் சென்று பிரசாரம் செய்ய நான்கு பிரசார ஊர்திகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிறுதானிய பயிர்சாகுபடி பிரசார வாகனத்தின் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிறுதானிய பயிர்சாகுபடி குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளது.
11-ம் தேதி முதல் 13 -ம் தேதி வரையிலும், நல்லம்பள்ளி வட்டாரத்தில் 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரையிலும், பென்னாகரம் வட்டாரத்தில் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரையிலும், பாலக்கோடு வட்டாரத்தில் 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரையிலும், காரிமங்கலத்தில் வட்டாரத்தில் 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையிலும், மொரப்பூர் வட்டாரத்தில் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரையிலும், பாப்பி ரெட்டிப்பட்டி வட்டா ரத்தில் 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரையிலும், அரூர் வட்டாரத்தில் 8-ம்தேதி முதல் 10-ம் தேதி வரையிலும் இந்த பிரசார வாகனங்கள் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடும்
திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாட்களுக்கு ஒவ்வொரு கிராமங்களுக்கும் ஒரு உதவி வேளாண்மை அலுவலருடன் சென்று சிறுதானியம் சாகுபடி செய்யும் முறை, சிறுதானியத்தின் பயன்கள், அதில் உள்ள சத்துக்கள், ஊட்டச்சத்து மேலாண்மை, நோய் மேலாண்மை, அறுவடைக்குப்பின் செய் நேர்த்தி பற்றி விவசாயிகள் மற்றும் பொது மக்களிடம் விளக்கம் அளிக்கவுள்ளது .
இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் விஜயா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) குணசேகரன், வேளாண்மை துணை இயக்குநர் அருள்வடிவு, தர்மபுரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் இளங்கோவன் மற்றும் வேளாண்மை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவ லர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.