ஓடும் பேருந்தில் செயின் பறிப்பு: ஒருவர் கைது
ஓடும் பேருந்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர்.;
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த ஏலகிரியான் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த பவுனு (46) இவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு கூலி வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு பஸ்ஸில் சென்று கொண்டிருந்தபோது நான்கு பவுன் தங்கச் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
புகாரின் அடிப்படையில் அதியமான் கோட்டை போலீசார் விசாரணை செய்து வந்தனர். ஏற்கனவே சேலம் திருட்டு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை மாவட்டம் பள்ளிப்பட்டியை சேர்ந்த பாரதி (32) என்ற பெண் பவுனிடமிருந்து நான்கு பவுன் செயினை பறித்தது தெரியவந்தது. இ
தை அடுத்து அதியமான் கோட்டை போலீசார் அவரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்தனர். பாரதி மறைத்து வைத்திருந்த நகைகளை போலீசார் மீட்டனர்.