தர்மபுரி மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 803 வேட்பாளர்கள் களத்தில்

தர்மபுரி மாவட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 266 வேட்புமனுக்கள் வாபஸ் பெறப்பட்டதால் 803 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்;

Update: 2022-02-08 04:45 GMT

தர்மபுரி நகராட்சியில் 215 பேர் வேட்புமனு தாக்கள் செய்த நிலையில் 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 212 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதில் 36 மனுக்கள் வாபஸ் பெற்றதால் 176 பேர் களத்தில் உள்ளனர்.

இதே போல கடத்தூர் பேரூராட்சியில் 76 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் 5 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 71 மனுக்கள் ஏற்றுகொள்ளப்பட்டதில் 21 மனுக்கள் வாபஸ் பெற்றதால் 50 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பி. மல்லாபுரம்பேரூராட்சியில் 77 வேட்புமனு தாக்கல் செய்தநிலையில் 77 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதில் 25 மனுக்கள் வாபஸ் பெற்றதால் 52 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அரூர் பேரூராட்சியில் 120 பேர் மனுதாக்கள் செய்தநிலையில் 9 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 111 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதில் 34 மனுக்கல் வாபஸ் பெற்றதால் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கம்பைநல்லூர் பேரூராட்சியில் 100 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் 1 மனு நிராகரிக்கப்பட்டு 99 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதில் 34 மனுக்கள் வாபஸ் பெற்றதால் 65 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சியில் 54 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் 54 மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டதில் 5 மனுக்கள் வாபஸ் பெற்றதால் 49 பேர் களத்தில் உள்ளனர்.

பென்னாகரம்பேரூராட்சியில் 112 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 109 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதில் 34 மனுக்கள் வாபஸ் பெற்றதால் 75 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

காரிமங்கலம் பேரூராட்சியில் 97 பேர் மனுதாக்கல் செய்த நிலையில் 1 மனு நிராகரிக்கப்பட்டு 96 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதில் 32 மனுக்கள் வாபஸ் பெற்றதால் 64 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பாலக்கோடு பேரூராட்சியில் 86 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் 1 மனு நிராகரிக்கப்பட்டு 85 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதில் 27 மனுக்கள் வாபஸ் பெற்றதால் 58 வேட்பாளர்கள் கலத்தில் உள்ளனர்.

மாரண்டஅள்ளி பேரூராட்சியில் 86 பேர் வேட்புமனு தாக்கல் செய்தநிலையில் 2 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 84 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதில் 11 மனுக்கள் வாபஸ் பெற்றதால் 73 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் 71 பேர்மனு செய்த நிலையில் 71 மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டதில் 7 மனுக்கள் வாபஸ் பெற்றதால் 64 பேர் களத்தில் உள்ளனர்.

மொத்தமாக தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் 1094 பேர் வேட்புமனு தாக்கல் செய்ததில் 25 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 266 மனுக்கள் வாபஸ் பெற்றதால் 803 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News