தர்மபுரியில் மின்சாரம் பாய்ந்து 3 பேர் உயரிழப்பு
தர்மபுரி அருகே மின்சாரம் பாய்ந்து தாய், மகன் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி அருகே மின்சாரம் பாய்ந்து தாய், மகன் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள ஓடைச்சக்ரை பகுதியை சேர்ந்தவர் மாதம்மாள் (60). இவரது வீட்டின் அருகே துணிகள் உலர்த்தியபோது கம்பியில் மின்சாரம் பாய்ந்தது. இதில் தாய் மாதம்மாள் (60) காப்பாற்றச் சென்ற அவரது மகன் பெருமாள் (33) மற்றும் உறவினர் சரோஜா (60) ஆகிய மூவரும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.
கனமழை பெய்ததால் மின் கம்பி அறுந்து விழுந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த சோக சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரியில் மின்சாரம் பாய்ந்து தாய், மகன் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் மழை
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. மேலும் வழக்கத்தை அதிகரித்தும் காணப்பட்டது. நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் தர்மபுரி நகரில் உள்ள முக்கிய சாலைகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து ஆறு போல் ஓடியது.
இதன் காரணமாக சாலைகளில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இலக்கியம்பட்டி பகுதியில் சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள். இந்த மழை காரணமாக பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் அதிகபட்சமாக பென்னாகரத்தில் 26 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- தர்மபுரி-20, அரூர்-17, பாப்பிரெட்டிப்பட்டி- 8, மொரப்பூர்- 10, நல்லம்பள்ளி- 13. மாவட்டம் முழுவதும் சராசரியாக 11.02 மி.மீ.மழை பதிவானது.