தர்மபுரி மாவட்டத்தில் 28 வாக்கு சாவடிகள் பதற்றமானவை
தர்மபுரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள 230 வாக்கு சாவடிகள் 28 வாக்கு சாவடிகள் பதற்றமானவை
தர்மபுரி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி 230 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 28 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறிய பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளின் சாதாரண தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. 192 பதவிகளுக்கு இந்த தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் மொத்தம் 1,74,161 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 230 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 28 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
தர்மபுரி நகராட்சியில் மட்டும் 33 வார்டுகளில் 57 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 14 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. தர்மபுரி நகராட்சி 33 வார்டுகளில் 19 இடங்களில் 57 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. ஆண்களுக்கு 24 வாக்குச்சாவடியும், பெண்களுக்கு 24 வாக்குச்சாவடியும், அனைத்து வாக்காளர்களுக்கு 9 வாக்குச்சாவடியும் அமைக்கப்பட்டுள்ளது.
பேரூராட்சிகளில், அரூர் பேரூராட்சியில் 30 வாக்குச்சாவடிகளில் 8 பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. கடத்தூர் பேரூராட்சியில் 15 வாக்குச்சாவடியும், காரிமங்கலம் பேரூராட்சியில் 15 வாக்குச்சாவடியும், பாலக்கோடு பேரூராட்சியில் 20 வாக்குச்சாவடியும், பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் 15 வாக்குச்சாவடியும், பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் 15 வாக்குச்சாவடியும், பென்னாகரம் பேரூராட்சியில் 18 வாக்குச்சாவடியும், மாரண்டஅள்ளி பேரூராட்சியில் 15 வாக்குச்சாடியும் அமைக்கப்பட்டுள்ளது
கம்பைநல்லூர் பேரூராட்சியில் 15 வாக்குச்சாடிகளில் 4 பதற்றமானவை என்றும் பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் 15 வாக்குச்சாவடியில் 2 பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
10 பேரூராட்சிகளில் மொத்தம் 173 வாக்குச்சாவடிகளில் 14 வாக்குச்சாவடி பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் 230 வாக்குச்சாவடிகளில் 28 பதற்றமானவை என அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது